Category Archives: அழகு குறிப்பு

இந்திய பெண்களின் டாப் 10 அழகு இரகசியங்கள்!

இந்திய பெண்கள் மிகவும் அழகானவர்கள். இதை யார் தான் மறுக்க முடியும்? பொதுவாக பெண்கள் அழகாவும் ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புவார்கள். உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். இந்திய பெண்களை கருத்தில் கொள்ளும் போது கலாச்சாரம் கலந்த, மிகவும் பவ்யமான குணமும், நீளமான கூந்தல் கொண்டும் மற்றும் மென்மையான சருமத்தை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அவர்கள் எப்படி இத்தகைய அழகை பெற்று மேம்படுத்துகின்றார்கள் என்று தெரியுமா?… Read More »

கற்றாழை ஜெல்லின் அழகு நன்மைகள்!

கற்றாழை கடவுள் நமக்கு கொடுத்த ஒரு அருமையான மருத்துவ குணம் கொண்ட பொருள். இத்தகைய கற்றாழையானது உடலின் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்யும் அளவில் மருத்துவ குணத்தைக் கொண்டிருப்பதோடு, பல்வேறு அழகு நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளது. அதனால் தான் நிறைய அழகு பொருட்களில் கற்றாழையின் ஜெல்லானது பயன்படுத்தப்படுகிறது. மேலும் கற்றாழை ஜெல்லானது குளிர்ச்சித் தன்மையைக் கொண்டிருப்பதால், அது சருமம் மற்றும் கூந்தலில் ஏற்படும் பிரச்சனைகளை விரைவில் போக்கிவிடுகிறது. ஆனால் கடைகளில் விற்கப்படும் கற்றாழை ஜெல்லைப் பயன்படுத்துவதை விட,இயற்கையாக செடிகளை பிய்த்து… Read More »

கண்ணாடி அணிந்த பெண்களும் அழகாக தெரியலாம்!

கம்ப்யூட்டரில் அதிக நேரமாக வேலை செய்பவர்கள் கண் கண்ணாடியை பலர் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. வாழ்வில் கண் கண்ணாடி அன்றாட வாழ்க்கையில் அவசியமான பொருளாக மாறிவிட்டது. தற்போது பல விதமான மாடல்களில் கண்ணாடியின் பிரேம் சின்னதாக, சிக்கென கவர்ச்சியாக வந்துவிட்டது. அதனால், கண்ணாடி அணியும் பெண்கள், மேக்கப் போடுவது முக்கியமானதாக மாறிவிட்டது. முகத்தின் அழகைப் மிகைப்படுத்தி காட்டுவதில் முக்கிய பங்கை கொண்டுள்ளது கண்கள். கண்ணாடி அணியும் பெண்கள் தங்கள் கண்களுக்கு எவ்வாறு மேக்-அப் போட வேண்டும்… Read More »

பெண்களுக்கு அழகு தருவது நிறமா? ஆரோக்கியமா?

நீங்கள் குண்டாக இருக்கிறீர்களா? ஒல்லியாக மாற்ற முடியும். நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்களா? குண்டாக மாற்ற முடியும். நீங்கள் கருப்பாக இருக்கிறீர்களா? வெள்ளையாக மாற்ற முடியாது. இதை முதலில்  புரிந்து கொள்ளணும். இது தான் நம் நிறம். இதை எப்படி அழகாக, ஆரோக்கியமாக தக்க வைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே, நம் கவனம் இருக்கணும். மற்றவர்கள், நம் நிறத்தைப் பற்றி, குறையாகப் பேசுவதற்கு இடம் தரக்கூடாது. ஒவ்வொருவருக்கும் ஒரு நிறம் என்பது இயற்கை. அதை, அப்படியே ஏற்பது தான் நியாயம். அதை விட்டு… Read More »

அழகான உதடுகளுக்கு இயற்கை முறை ஆலோசனை!

முக அழகின் முழுமையை வெளிப்படுத்துவதில் கண்களுக்கு இணையாக உதடுகளுக்கும் முக்கியத்துவம் உண்டு.உடலிலுள்ள சருமம் 28 நாட்களுக்கொரு முறை வெளித்தோலை உதிர்க்கிறது. அதுவே உதடுகளில் உள்ள சருமம் உதிர மாதக் கணக்கில் ஆகும்.சரியான பராமரிப்பு இல்லாததால்தான் உதடுகள் தோலுரிந்தும், வறண்டும் காணப்படுகின்றன. உதடுகளைப் பராமரிக்க சில ஆலோசனைகள்… பொதுவான ஆலோசனைகள் : தினசரி பெட்ரோலியம் ஜெல்லியை உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் மென்மையாக மாறும். வாரம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு உதடுகளை வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த தண்ணீரால்… Read More »

பெண்களே உங்கள் வசீகர முக அழகிற்கு அருமையான டிப்ஸ்!

இயற்கையின் படைப்பில் அனைத்துமே அழகுதான். அழகை சீராக பராமரிப்பதன் மூலம் தான் ஆரோக்கியமான அழகை பெறமுடியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் உடலின் உள்ளே நோயின் தாக்கம் இருந்தால் அதன் வெளிப்பாடு முகம் மற்றும் சருமப் பகுதிகளில் தெரியவரும். இன்றைய நாகரீக உலகில் காற்றும், நீரும் மாசடைந்துள்ளன. மேலும் வாகன புகைகளின் காரணமாக உடல் அலர்ஜி உண்டாகி சருமப் பாதிப்பு உண்டாகிறது. எண்ணெய் வழியும் சருமத்திற்கு சிலருக்கு எவ்வளவுதான் சோப்பு போட்டு முகம் கழுவினாலும் முகத்தில் எண்ணெய்… Read More »

உடலில் உள்ள தழும்பை போக்க விட்டமின் ஈ யை எப்படி பயன்படுத்தலாம்?

களங்கமற்ற முகம் அனைவரையும் ஈர்க்கும். முகத்தில் பருக்கள் தோன்றி அதனால் ஏற்படும் தழும்புகள் விரைவில் போகாது. அவற்றை போக்க சில இயற்கை தீர்வுகள் உண்டு. அவற்றை பயன்படுத்தி தழும்புகளை மறைய செய்யலாம். அப்படி பட்ட தீர்வுகளில் ஒன்று வைட்டமின் ஈ எண்ணெய். தழும்புகளை போக்குவதில் வைட்டமின் ஈ எண்ணெய்யின் பங்கை இந்த தொகுப்பில் பார்க்கலாம். வைட்டமின் ஈ எண்ணெய்யை தழும்பில் தடவுவதால் அவை விரைவில் குணமாகும் என்று நம்பப்படுகிறது. வைட்டமின் ஈ சேர்க்கப்பட்ட ஆயிண்ட்மென்ட் அல்லது க்ரீம்கள்,… Read More »

உங்கள் மூக்கின் மேல் உள்ள கரும்புள்ளிகளை போக்க சில வீட்டு வைத்தியங்கள்!

முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்களை இந்த பகுதியில் காணலாம். பட்டை மற்றும் தேன்: பட்டை மற்றும் தேன் இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை… Read More »

உங்களுக்கு அழகான ரோஜாப்பூ போன்ற கன்னங்கள் பெற உதவும் சில இயற்கை வழிகள்!

பிரகாசமான இளஞ்சிவப்பான கன்னங்கள் எந்த ஒரு மேக்கப்பையும் மிஞ்சி நிற்கும். கன்னங்களின் இந்த இயற்கையான பொலிவு சருமத்தை மிகவும் ஆரோக்கியமாகக் காட்டும். அதற்கு வழக்கமான முகப் பொலிவேற்றும் முறைகளை விட்டுவிட்டு இயற்கையாக வீட்டிலேயே செய்யக்கூடிய முறைகளுக்கு மாறுங்கள். இங்கு அப்படி அழகான ரோஜாப்பூ போன்ற கன்னங்கள் பெற உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அதனைப் பின்பற்றி பாருங்கள். பீட்ரூட் சருமத்திற்கு இளஞ்சிவப்பைத் தர பீட்ரூட் ஒரு சிறந்த வழி. இரண்டு அல்லது மூன்று… Read More »

சாமுத்திரிகா லட்சணம்: மான்விழி கொண்ட மங்கையர் எப்படியிருப்பார்கள்?

மான் விழி என்று சொல்வார்கள் மருளக் கூடிய பார்வை கொண்டவர்கள் கணவருக்கு ஏற்றவராகவும் எல்லா இடத்திலும் நேர்மறை சிந்தனை கொண்டவராகவும் இருப்பார்கள். சாமுத்திரிகா சாஸ்திரம் மனித உடலில் ஒவ்வோர் அங்கமும் எப்படி அமைந்திருக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்துள்ளது. சிலை வடிப்பவர்களுக்கும் சித்திரம் வரைபவர்களுக்கும் அடிப்படையாகத் தெரிந்திருக்கவேண்டும் என்று கருதப்படுகிறது. சாமுத்திரிகா லட்சணம் பற்றி பாக்யராஜ் படங்களில் அதிகம் கேட்டிருப்போம். பத்தினி, சித்தினி, சங்கினி, அத்தினி என நான்கு வகைப் பெண்கள் என்றும் எந்த வகைப் பெண்… Read More »