Category Archives: ஆரோக்கியம்

பித்தக் கோளாறைப் போக்கும் அன்னாச்சி!

இயற்கை நமக்கு அளித்துள்ள கொடைகளில் முக்கியமான பழங்களில் ஒன்று அன்னாச்சி பழம். அன்னாசியில் மாங்கனீஸ் சத்துக்கள் நிறைய உள்ளன. சமீபத்திய ஆய்வுகளில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. அன்னாசி பெரும்பாலும் வெப்பமான பகுதிகளில் பயிரிடப்படுகிறது. புரதத்தை செரிக்கக் கூடிய புரோமலைன் என்ற என்சைம் இதில் அதிகம் உள்ளது. இது ரத்தம் உறையாமல் பாதுகாக்கிறது. தையாமின் மற்றும் வைட்டமின் சி சத்தும் அன்னாசியில் அதிகம் உள்ளது. அன்னாசி பழம் சாப்பிடுவதால் காது மற்றும் சளித்தொல்லை, ப்ளூ காய்ச்சல் உள்ளிட்டவற்றில் இருந்தும் பாதுகாப்பு… Read More »

தலைவலி தவிர்க்கும் 7 எளிய வழிமுறைகள்!

உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலிதான். ‘காலையில் எழுந்ததில் இருந்து தூங்குற வரையிலா இருக்கும்?’ என வேதனையோடு புலம்புபவர்களும் இருக்கிறார்கள். சரி… தலையில் உண்டாகும் இந்த வலிக்கு என்ன காரணம்? வாகன இரைச்சல், அதீத வேலைப் பளு, குறிப்பிட்ட நேரத்துக்குள் வேலையை முடிக்கவேண்டிய நிர்ப்பந்தம், இத்தனைக்கும் நடுவில், எதிர்காலம், குடும்பம் பற்றிய யோசனைகள்-கவலைகள், செரிமானக் கோளாறு… எனத் தலைவலிக்கு எது வேண்டுமானாலும் காரணமாக இருக்கலாம். இப்படிப் பல பிரச்னைகளால் தவிர்க்க… Read More »

உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்!

அந்த காலத்தில் ஆயுட்காலம் அதிக நாட்கள் நீடித்ததற்கு தானியங்களும் ஒருவகை காரணம் என்று சொல்லலாம். ஆனால் இப்போது, தானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வதே இல்லை. இதோ சத்தான கொள்ளு- பார்லி கஞ்சி பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உடல் சிக்கென்று இருக்க கொள்ளு கஞ்சி குடியுங்கள்! வறுத்துப் பொடித்த கொள்ளு, வறுத்துப் பொடித்த பார்லி மாவு (இவை இரண்டையும் மொத்தமாக தயார் செய்து வைத்துக் கொள்ளலாம்). சீரகத்தூள் – 1 சிட்டிகை, மிளகுத்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு… Read More »

வாயு ஏற்படுவது ஏன்? வாயுவைக் கட்டுப்படுத்த சிகிச்சைகள்!

வாயுப் பிரச்சினை. இது மூக்கைப் பிடித்துக்கொள்ள வேண்டிய பிரச்சினைதான். என்றாலும் எல்லோரும் அறிய வேண்டிய முக்கியமான பிரச்சினை ‘நாகரிக உணவுப் பழக்கம்’என்ற பெயரில் பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவுகளையும் எப்போது சாப்பிட ஆரம்பித்தோமோ, அப்போதிலிருந்து பலரையும் வருத்தி எடுக்கும் பிரச்சினையாக இது உருமாறிவிட்டது. வாயுத் தொல்லை எது? அஜீரணம், அடிக்கடி ஏப்பம் வருதல், வாயு பிரிதல், வயிற்று இரைச்சல், வயிற்று உப்புசம் ஆகிய அறிகுறிகளுடன் காணப்படும் உணவுப்பாதைப் பிரச்சினையை அலோபதி மருத்துவம் ‘வாயுத் தொல்லை’(Flatulence) என்கிறது.… Read More »

இரத்த அழுத்தம் (Blood Pressure) ஒரு நோயா ? ஒரு தகவல்!

இன்று உலக மக்களில் 65 சதவீதம் பேருக்கு மேல் இரத்த அழுத்தம், நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். அன்றாடம் நாம் சந்திக்கும் நபர்களில் இருவருக்காவது இரத்த அழுத்த நோயின் பாதிப்பு இருக்கிறது. இந்த இரத்த அழுத்த நோய் எவ்வாறு தோன்றுகிறது. இதற்கு காரணமென்ன, இதனை தடுக்க முடியுமா அல்லது முழுமையாக குணப்படுத்த முடியுமா என நம் மனதில் பல கேள்விகள் எழும். வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகளில், இறப்பு விகிதம் அதிகரிப்பதற்கு, ரத்த அழுத்த நோய்… Read More »