ஒரே மாதத்தில் தளர்ந்து தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற இத ட்ரை பண்ணுங்க…

பெரிய மார்பகங்களைக் கொண்ட பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் அது தொங்கி அசிங்கமாக காணப்படுவது. மார்பகங்கள் தொங்குவதால் பெண்களால் எந்த ஒரு விருப்பமான உடையையும் அணிய முடியாமல் தவிப்பார்கள். சரி, மார்பகங்கள் ஏன் தொங்குகின்றன என்று தெரியுமா? எவை மார்பகங்களைத் தளர்ந்து தொங்கச் செய்கின்றன என்று தெரியுமா?

மார்பகங்கள் வயது அதிகரித்தால், உடல் பருமன் அதிகரித்தால், புகைப்பிடித்தால், கருத்தரித்தால் தொங்க ஆரம்பிக்கும். இப்படி தொங்கும் மார்பகங்களை ஒருசில இயற்கை வழிகளின் மூலம் சிக்கென்று மாற்ற முடியும். இங்கு அந்த வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

நல்ல நிலை: கூன் போட்டு குனிந்து உட்கார்ந்தவாறு இருந்தால், அது மார்பகங்களைப் பாதிக்கும். எனவே கூன் போட்டு உட்காராமல் எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.

ஐஸ் கட்டி மசாஜ்: தொங்கும் மார்பகங்களின் அழகை அதிகரிக்க, தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் வட்ட சுழற்சியில் மசாஜ் செய்ய வேண்டும்.

கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல்லைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்தால், அது அப்பகுதியில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் மற்றும் இணைப்புத்திசுக்களை வலிமையாக்கும். அதற்கு தினமும் 15 நிமிடம் கற்றாழை ஜெல்லை மார்பகங்களில் தடவி மேல் நோக்கி மசாஜ் செய்ய வேண்டும்.

ஆலிவ் ஆயில் மசாஜ்: ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது மார்பக திசுக்களைப் பாதிக்கும் ப்ரீ-ராடிக்கல்களிடமிருந்து நல்ல பாதுகாப்பை வழங்குவதுடன், பாதிக்கப்பட்ட மார்பக திசுக்களைப் புதுபிக்கும். ஆகவே தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு மார்பகங்களை 15 நிமிடம் மசாஜ் செய்து வர, ஒரே மாதத்தில் ஓர் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

வெள்ளரிக்காய் மாஸ்க்: வெள்ளரிக்காயை துருவி, அத்துடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு சேர்த்து கலந்து, இரவி முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.

முட்டை வெள்ளைக்கரு: முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளிக்கும்.

உடற்பயிற்சி: தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்ற உதவும் சிறப்பான மற்றொரு வழி தான் உடற்பயிற்சி. தினமும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற பயிற்சிகளை தினமும் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடையும்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

சீரக தண்ணீர் கொஞ்சம் குடிப்பதால், உங்கள் உடம்பில் ஏற்படும் அற்புத மாற்றங்கள்!