அழகான நீண்ட கூந்தல் வேண்டுமா உங்களுக்கு…

கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கையான மூலிகைகளைக் கொண்ட எண்ணெய்களை தயாரித்து உபயோகித்து வந்தால் அழகான, நீண்ட கூந்தல் பற்றிய உங்கள் கனவு நிஜமாகும்.

தேவையானவை :

1. தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

2. நெல்லிக்காய் காய்ந்த பொடி – 10 கிராம்

3. தான்றிக்காய் பொடி – 10 கிராம்

4. வேப்பிலைப் பொடி – 10 கிராம்

5. கறிவேப்பிலைப் பொடி – 10 கிராம்

6. மருதாணிப் பொடி – 10 கிராம்

7. கரிசலாங்கண்ணிப் பொடி – 10 கிராம்

8. செம்பருத்திப் பூ காய்ந்த பொடி – 10 கிராம்

9. வெட்டி வேர் – 10 கிராம்

10. ரோஜா இதழ் – 10 கிராம்

11. சந்தனப் பொடி – 10 கிராம்

இந்த பொடிகளை ஒன்றாகச் சேர்த்து தேங்காய் எண்ணெயில் கலந்து நன்றாகக் காய்ச்சி, பின்பு சூரிய ஒளியில் ஐந்து நாட்கள் வைத்து பின்பு வடிகட்டி அந்த எண்ணெயை உபயோகித்து வந்தால், கூந்தல் உதிர்வது குறைந்து, பேன், பொடுகு போன்றவை நீங்கும். உடல் சூடு தணிந்து, பித்த நரை குணமாகும்.

பயனுள்ள தகவல். அனைவருக்கும் பகிருங்கள்.

அதிர்ஷ்ட மழை பொழிய! தூங்கும் முன் இதை செய்திடுங்கள்!