பாகற்காய்… பல பிரச்சனைகளை தீர்க்கும் அருமருந்து!

பாகற்காய்… இந்த பெயரை சொன்னவுடன் பலருக்கு குமட்டல் வந்துவிடும். சிலர் வாய் முழுக்க அதன் கசப்பு படர்ந்துவிட்டதுபோல உணர்வார்கள். பாகற்காய், அந்த அளவுக்கு வெறுத்து ஒதுக்கவேண்டிய காய் அல்ல. நமக்கு நன்மை தரும் பல அம்சங்கள் இதில் உள்ளன. .

* புரோக்கோலியில் இருப்பதைவிட இரண்டு மடங்கு பீட்டா கரோட்டின் இதில் உண்டு. இந்த பீட்டா கரோட்டின்தான், நம் உடலுக்குள்  ஏ-வாக மாற்றப்பட்டு சேகரமாகும். இது, நமது கண், தோல் போன்றவவைட்டமின்ற்றுக்கு நல்லது. பசலைக்கீரையில் இருப்பதைவிட இரண்டு மடங்கு கால்சியம் இதில் உண்டு. இது, நமது எலும்பு, பல் வளர்ச்சிக்கு உதவும். வாழைப்பழத்தில் உள்ளதைவிட இரண்டு மடங்கு பொட்டாசியம் இருக்கிறது. தசை வலிமை, நரம்பு மண்டல செயல்பாடு, இதய நலன் போன்றவற்றுக்கு பொட்டாசியம் உதவும்.

* இரைப்பை பிரச்னைகளுக்கு நல்ல மருந்து. பாகற்காயை ஜூஸாக குடிப்பது குடலில் உருவாகும் புழுக்கள், ஒட்டுண்ணிகளை கொல்ல உதவும். ஒவ்வாமை, வீக்கம், கட்டிகளையும் பாகற்காய் போக்கும். இதன் விதைகள், இதய நோய்களிலிருந்து நம்மை காக்கும். தேவையற்ற கொழுப்புகளை எரித்து, இதய தமனி அடைப்பு ஏற்படுவதில் இருந்து காப்பாற்றும்.

* இதன் சாற்றை, எலுமிச்சை சாற்றில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் ஆறு மாத காலம் குடித்துவர, முகப்பரு பிரச்னை நீங்கும். தோல் பிரச்னைகளான சிரங்கு, அரிப்பு, சொரியாஸிஸ், படர்தாமரை, அலர்ஜி போன்றவற்றுக்கு தீர்வு தரும். இதன் சாற்றை தயிரில் கலந்து தலையில் தடவி, சிறிது நேரம் கழித்து கழுவிவிட வேண்டும்.

இதை, தொடர்ந்து செய்தால், முடி பளபளப்பாக மாறும். இதன் சாற்றுடன் சீரகத்தை அரைத்து பூசிவர, பொடுகு பிரச்னைகள் நீங்கும். இதன் சாற்றுடன் வாழைப்பழத்தை அரைத்து தலையில் தேய்த்தால், தலை அரிப்பு நீங்கும். பாகற்காய் சாற்றோடு கொஞ்சம் சர்க்கரை சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து தலையில் பூசி வர, முடிகொட்டுவது குறையும்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்!