வாய் துர்நாற்றத்தை போக்க எளிமையான இயற்கை வழிகள்!

‘ ஹலிடோசிஸ்’ எனப்படும் வாய் துர்நாற்றம், ஒரு நோய் இல்லை. ஆனால் பொது வாழ்வில் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும். வாய் துர்நாற்றம் என்பது ஒரு தற்காலிகமான அறிகுறி தான். வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளும் வழக்கத்தை பின்பற்றினால் அது தானாகவே சரியாகி விடும். ஆனால் சில நேரங்களில் அது உள்ளே காணப்படும் சில பிரச்சினைகளை பற்றி நமக்கு உணர்த்தும் எச்சரிக்கையாகவும் அது இருக்க கூடும். வாய் துர்நாற்றம் நீங்க இயற்கை வழிகளை நாட நீங்கள் எண்ணுவீர்களானால், ஆயுர்வேதத்தில்… Read More »

உங்கள் முழு ஆரோக்கியத்துக்கு நீங்கள் வேப்பிலையை பயன்படுத்தக் கூடிய 10 வழிகள்!

உலகம் முழுவதிலும் உள்ள பல்வேறு வியாதிகளுக்கு வேப்பிலை மருந்தாகும் என உங்களுக்கு தெரியுமா? லீவர் ஆயுஷின் ஆயுர்வேத நிபுணரான *டாக்டர். மஹேஷ் டி.எஸ். இது குறித்து, “வேப்பிலை நாவுக்கு கசப்பாக இருந்தாலும், உடலுக்கு இனிப்பையும் பாதுகாப்பினையும் தரும்.” என்று கூறியுள்ளார். இன்னும் சொல்வதானால், வேப்பிலை பல நற்குணம் நிறைந்ததாகும். ஆயுர்வேதத்தை பொருத்த வரையில், அது பல நோய்களை குணப்படுத்தும் குணம் கொண்ட சக்தி வாய்ந்த மூலிகையாகும். 4500 ஆண்டுகளுக்கு முன்பே இது பல்வேறு உபாதைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்பட்டதற்கான… Read More »

கவலை, ஸ்ட்ரெஸ் & மனஅழுத்தம் ஆகியவற்றை ஆயுர்வேதம் மூலம் சரி செய்தல்!

WHO சமீபத்திய அறிக்கையின் படி இந்தியாவின் பெரும்பாலான மக்கட் தொகை மனரீதியான சிக்கல்களால் பாதிக்கப்பட்டு அதனை சரி செய்து கொள்ள வல்லுனர்களின் உதவி தேவைப்படுவதாக கூறுகிறது. அதில் 7.5% வயதானவர்கள் ஆவர். எனவே தான், உலக மக்களின் கவனம் பண்டைய காலங்களில் பின்பற்றப்பட்டு வந்த யோகா, ஆயுர்வேதம் மற்றும் தியானம் போன்ற முழுமையான தீர்வுகளின் பக்கம் திரும்பியுள்ளது. *லீவர் ஆயுஷின் ஆயுர்வேத நிபுணரான டாக்டர். மஹேஷ் டிஎஸ், இது பற்றி கருத்து தெரிவிக்கையில், “ஸ்ட் ரெஸ் மட்டுமே… Read More »

தாய்மார்களே குழந்தை பிறந்தபின் எடை கூடிவிட்டது? இதோ ஒரு இல்லத்தரசியின் எடைக் குறைப்பு திட்டம்!

பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட உடல் பருமனை, 10 ஆண்டுகள் கடந்த பிறகும் குறைக்க முடியாதது ஏன் என என்றேனும் நீங்கள் நினைத்தது உண்டா? ஓரிடத்தில் நிற்காமல் பரபரவென நீங்கள் ஓடியாடி வேலை செய்யலாம், வீட்டில் எல்லோரையும் கவனித்துக் கொள்ளலாம், இருந்தபோதிலும் உங்களின் இடுப்பு மற்றும் தொடைகளில் உள்ள கொழுப்புச் சதை குறையவே குறையாது. அநேகமாக, உங்களின் சீரற்ற உணவுப்பழக்கத்திற்கு, ஒரு இடைவெளி விட இது தகுந்த நேரமாக இருக்கலாம். ஒரு பிசியான இல்லத்தரசிக்கு, எந்த பாதிப்பும் இன்றி,… Read More »

குளிர் காலத்தில் தலைமுடி அதிகம் கொட்டுவதற்கு காரணங்கள் மற்றும் முடி உதிர்வை நிறுத்த அருமையான டிப்ஸ்.

குளிர்காலம் இதோ நம்மை நெருங்கிவிட்டது. அத்துடன் நமது கூந்தல் இனி பொலிவின்றியும் பளபளப்பு குறைந்தும் காணப்படுமே என்ற கவலையும் நம்மை ஆழ்த்த தொடங்கிவிடும். அத்துடன் முடியுதிர்வும் சேர்ந்து அந்த கவலையை மேலும் அதிகரித்துவிடும். இப்போது நாம் சில தகவல்களை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குளிர்காலத்தில் தலை முடி அதிகம் கொட்டும் என்ற கருத்துக்கு எதிராக குளிர்காலத்தில் நமது கூந்தலில் மெலாடோனின் என்ற கெமிக்கல் அதிகம் சுரக்கும் எனவும் அது முடியுதிர்வை தடுத்து புதிய ரோமங்கள் வளர… Read More »

இந்தியர்களுக்கு இளநரை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் போக்கும் வழிகள்!

வயதாவதன் அடையாளமாக நரை முன்பு கருதப்பட்டது. ஆனால் அது தற்காலத்துக்கு பொருந்தாது. 20 களின் ஆரம்பத்திலேயே சிலருக்கு நரை ஏற்படுகிறது. சிலருக்கோ அதற்கு முன்பே ஏற்பட்டுவிடுகிறது. இந்தியாவில் இள நரயால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்தபடியே இருக்கிறது. கூந்தலின் நிறம் மெலனின் என்ற பிக்மென்ட்டை பொருத்து அமைகிறது. மெலனின் அளவு அதிகமாக இருந்தால் உங்கள் கூந்தல் கருமையாக இருக்கும். வயதின் காரணத்தால் வெள்ளை முடி ஏற்படுவது இயற்கை என்றாலும் பெரும்பாலும் அது இளவயதிலேயே தோன்றிவிடுகிறது. இள… Read More »

நெஞ்சில் தேங்கியிருக்கும் நாள்பட்ட சளியால் அவதியா? இதோ எளிய பாட்டி வைத்தியம்!

பொதுவாக காலநிலை மாற்றத்தால் நாம் அனைவரும் சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று தான் சளி தொல்லை. தொண்டை மற்றும் நெஞ்சுப் பகுதியில் தேங்கிக் கொண்டால் அது நாளடைவில் நெஞ்சுக்குள் கட்டிக்கொண்டு சளியாகிவிடும். இது நாள்பட நாள்பட மூச்சிரைப்பு, ஆஸ்துமா ஆகியவையாக மாறிவிடுகிறது. இதனை எளிய முறையில் போக்கும் சில பாட்டி வைத்தியங்கள் சிலவற்றை பார்ப்போம். சிறிதளவு வேப்பிலைகளை கையில் எடுத்துக் கொண்டு ஐந்து ஓமவல்லி இலைகளையும் சேர்த்து நன்கு மை போல அரைத்து நெற்றியில் பற்று போல இட்டு… Read More »

வாய்ப்புண் வருவதை தடுக்கும் இயற்கை மருத்துவ முறைகள்!

வாய்ப்புண் வருவது மிகவும் சாதாரண விஷயமாக இருந்தாலும், அதைக் கவனிக்காமல் விட்டாலோ, அடிக்கடி வந்தாலோ பிரச்சினை பெரிதாகிவிடும். தொடக்கத்தில் உதடு, கன்னம், நாக்கு, அண்ணம் ஆகிய பகுதிகளில் கடுகளவு தோன்றும் கொப்புளங்கள், சில நாட்களில் உடைந்து, உளுந்து அளவுக்குக் குழிப்புண்களாக மாறி வலியை ஏற்படுத்தும். நாளடைவில் சாப்பிடும்போதும் பேசும்போதும் வலி அதிகமாகும். கழுத்தில் நெறிகட்டும், காய்ச்சல் வரும், உடல்வலி, தலைவலி எனத் தொல்லைகள் தொடரும். வாய்ப்புண் காரணங்கள்: ஸ்ட்ரெஸ், மன அழுத்தம் பேக்டீரியா, புஞ்சனம், வைரஸ் இவற்றாலும்… Read More »

வெறும் வயிற்றில் பூண்டுடன் இதை சேர்த்து சாப்பிடுங்க. 14 வகையான புற்றுநோய்களை கட்டுப்படுத்துமாம்!

மனிதனை உயிரை பறிக்கும் கொடிய நோய்களில் புற்றுநோய் உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இன்று இந்த கொடிய நோயினால் இறந்து கொண்டே தான் இருக்கின்றார்கள். அந்த வகையில் 14 வகையான புற்றுநோயை தடுக்க கூடிய ஆற்றல் பூண்டிற்கு உள்ளது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றார்கள். பூண்டில் உள்ள allicin என்கிற முக்கிய மூல பொருள் நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக வைக்கின்றது. இதனால் தான் நமது உடல் 14 வகையான புற்றுநோய்களை எதிர்த்து நிற்கிறது. பூண்டினை… Read More »

பனங்கிழங்கை எப்படி சாப்பிட்டால் அதிக பலனை பெறலாம்?

பனங்கிழங்கு என்பது மரத்தில் விளைவதும் அல்ல, மரத்தின் அடியில் விளைவதும் அல்ல. பனை மரத்தில் இருந்து கிடைக்கும் முற்றிய நுங்குகளை மண்ணில் புதைத்து விட்டால், அது சில நாட்களில் முளை விட்டு பனை மரமாக வளரும். அப்படி முளைவிட்ட உடனே அதை தோண்டிப் பார்க்கும் போது, அதில் நீண்ட குச்சி போன்று இருக்கும். அதுவே பனங்கிழங்கு ஆகும்.பனங்கிழங்கை எப்படி சாப்பிடலாம்? பனங்கிழங்கின் தோலை உறித்து வேகைவைத்து, அதன் நடுவில் காணும் தும்பு எனும் நரம்பு மற்றும் நாரை… Read More »