உச்சி முதல் உள்ளங்கால் வரை நோய்களை தீர்க்கும் ஓர் எளிய மூலிகை பற்றி தெரியுமா?

வாதமடக்கி என்று அழைக்கப்படும் தழுதாழை, சாலையோரம், வயலோரங்களில், புதர்களில் மண்டிக் காணப்படும் ஒரு குருஞ்செடியாகும். இளம்பச்சை வண்ணத்தில் ஆலிலை வடிவில் காணப்படும் இதன் இலைகள், மிக்க மருத்துவ நன்மைகள் வாய்ந்தவை. அதைப்போல, தழுதாழை வேரும் அரிய பலன்கள் தரவல்லது.இள வண்ணத்தில் பூக்களுடன் காணப்படும் இச்செடிகளின் தண்டுகள் எளிதில் முறியும் வண்ணம் இருக்கும். தற்காலங்களில், இதன் மருத்துவ நன்மைகளை உணர்ந்து, வீடுகளில் மூலிகைச் செடியாக வளர்த்து வருகின்றனர்.

தழுதாழை, வாதம் எனும் உடல் காற்றின் பாதிப்பால் ஏற்படும் அனைத்து வாத வியாதிகளுக்கும் சிறந்ததொரு தீர்வாக விளங்குகிறது, வாத வியாதிகள் உடல் இயக்கத்தை பாதித்து, மூளையின் செயல்பாட்டை முடக்கும் தன்மை மிக்கவை. பக்கவாதம் மற்றும் இளம்பிள்ளை வாதம் போன்ற கடுமையான உடல் நல பாதிப்புகளை சரி செய்யும் ஆற்றல் மிக்கது, தழுதாழை.

உடல் வலி போக்கும் தழுதாழை: உடலில் வியாதிகள் அகன்ற பின்னர், நலியுற்ற உடலை, தேற்றி, உடலை வலுவாக்கும் தன்மைமிக்கது. உடல் மெலிந்தவர்களையும் தேற்றும். உடலின் உள் உறுப்புகளை ஊக்குவித்து, இரத்தத்தில் கொழுப்பைக் கரைத்து, அடைப்பை நீக்கும் சக்திமிக்கது, சளியைக் கரைத்து, சுவாசத்தை சீராக்கும், தழுதாழையில் உள்ள அரிய வேதிப்பொருட்களே, இதன் ஆற்றலுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், இரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக்கி, உடல் நல பாதிப்பை விலக்குகிறது, தழுதாழை.

உடல் வலி போக்கும் தழுதாழை இலைக்குளியல்.நாள்பட்ட மூட்டு வலியினால் அவதிப் படுபவர்கள், இரவில், தழுதாழை இலைகளை குளிக்கும் நீரில் இட்டு ஊற வைத்து, அந்த நீரை காலையில் சூடாக்கி, குளித்து வர, மூட்டுவலிகள் படிப்படியாக குறையும், உடலும் புத்துணர்ச்சி பெரும்.

பக்க வாதம் குணமாக: வாத வியாதிகளின் பாதிப்புகளால், சிலருக்கு உடலில் ஒரு பக்கம் செயல் இழந்து, கை கால்களில் உணர்வில்லாத நிலை ஏற்படும், சிலருக்கு இந்த பாதிப்பு முகத்தில் ஏற்படும், முகத்தில் உள்ள சில நரம்புகள் செயல் இழந்து, முக அசைவு இல்லாமல் இருக்கும். இந்த பாதிப்புகள் விலகிட, தழுதாழை இலைகளை நல்லெண்ணையில் இட்டு நன்கு தைலம் போல வரும் வரை காய்ச்சி, அதை, உடலில் பாதிப்புள்ள முகம் மற்றும் கை கால்களில் இலேசாக மசாஜ் செய்து வர, விரைவில் நன்மைகள் கிடைக்கும்.

தழுதாழை எண்ணெய்: சில தழுதாழை இலைகளை, விளக்கெண்ணையில் வதக்கி, ஆறியபின், இலைகளோடு எண்ணையை, வலியுள்ள கைகால் மூட்டுகளில் தடவிவர, மூட்டு வலி சரியாகும்.

இதயத்தைக் காக்கும் தேன் தழுதாழை: தழுதாழை இலைகளை, தேனில் ஊற வைத்து, தினமும் ஓரிரு இலைகளை சாப்பிட்டு வர, பாதிப்புகள் விலகி, இதயம் வலுவாகும், தோள், கைகால்கள் வலுவடையும். எழும்பும் தோலுமாக உடலில் சதைப் பிடிப்பின்றி காணப்படுபவர்கள், இதை தினமும் சாப்பிட்டு வர, தேகம் ஊறி, பொலிவுடன் காணப்படுவர்.

ஞாபக சக்தியை வளப்படுத்தும்: தழுதாழை இலைகளோடு, இஞ்சி, புதினா மற்றும் மிளகை சேர்த்து நன்கு அரைத்து, தினமும் இலந்தைப் பழம் அளவு சாப்பிட்டு வர, ஞாபக சக்தி பெருகும்.

சளியை சரியாக்க: சிலர், ஜலதோஷம் ஏற்படும் காலங்களில் மூக்கில் வடியும் நீரால், மற்றவர்களுடன் இயல்பாக பேச முடியாமல், தடுமாறி, மூக்கின் மேல் கர்ச்சீப்பை பிடித்தபடியே சங்கடத்துடன் இருப்பர். இவர்களின் பாதிப்புகள் தீர, தழுதாழை இலைச் சாற்றை, மூக்கின் மேல் தடவி வர, சுவாச பாதிப்பினால் ஏற்பட்ட தும்மல், மூக்கில் நீர் வடிதல் மற்றும் தலை வேதனை யாவும் நீங்கி விடும்.தகுந்த ஆலோசனைகளைப் பெற்று, தழுதாழை இலைச் சாற்றை, மூக்கில் ஓரிரு சொட்டுக்கள் விட, மூக்கடைப்பு விலகி, சுவாசம் சீராகும்.

தலைபாரம் நீங்க: இன்னொரு நிவாரணமாக, தழுதாழை இலைகளை மஞ்சள் தூளுடன் கலந்து நீரில் இட்டு காய்ச்சும் போது, வரும் ஆவியை, மேற்கண்ட பாதிப்புள்ளவர்கள் சுவாசித்து வரும் போது, மூக்கடைப்பு, தலை பாரம், தலைசுற்றல், வலி மற்றும் கழுத்து வலி போன்றவை அகலும்.

கடும் வலி: சிலர் ஓடும்போது கல் தடுக்கி அல்லது நடக்கும்போது எதிலோ இடித்துக்கொண்டு அல்லது உறங்கும்போது சரியான தலையணை இல்லாத பாதிப்பால், கை கால் மற்றும் கழுத்தில் சுளுக்கு ஏற்படும், இதனால், கழுத்தைத் திருப்புவதில் கடும் வலி ஏற்படும், திருப்பவும் முடியாது, கால்களில் ஏற்பட்ட சுளுக்கால், நடக்க முடியாது.இந்த பாதிப்பால் அவதிப்படுபவர்கள், அரிசி கழுவிய நீரில் தழுதாழை இலைகளை இட்டு வேக வைத்து, அந்த இலைகளை ஒரு மெல்லிய பருத்தித் துணியில் எடுத்துக் கொண்டு, சுளுக்கு உள்ள இடங்களில், மெதுவாக ஒத்தி எடுக்க, வேதனை தந்த சுளுக்கு பாதிப்புகள் யாவும் மறைந்து விடும்.

சுளுக்கு சரியாக: மேலும், தழுதாழை இலைகளை, விளக்கெண்ணையில் இட்டு வதக்கி, சுளுக்கு ஏற்பட்ட இடங்களில், அந்த இலைகளை சிறிது நேரம் வைத்து இருக்க, சுளுக்கு நீங்கி விடும். இதையே, மூட்டுவலி சமயங்களிலும் செய்து வர, நற்பலன்கள் கிடைக்கும்.

ஜுரம் விலக: தழுதாழை இலைச்சாற்றை, இருவேளை சாப்பிட, ஒரே நாளில் ஜுரம் விலகி விடும்.

நெறி கட்டுதல் நீங்க: தழுதாழை இலைகளை, விளக்கெண்ணையில் இட்டு, வதக்கி, அதை வீக்கம் ஏற்பட்ட இடத்தில் வைத்து கட்டி வைக்க, ஆண்களின் விரை வீக்கம் மற்றும் நெறி கட்டிய பாதிப்புகள் விலகி விடும்.

தழுதாழை வேர் மகத்துவம்: தழுதாழை வேரை நல்லெண்ணையில் இட்டு காய்ச்சி, மூட்டுகளில் வலி உள்ள இடங்களில் இலேசாக தடவி வர, மூட்டு வலி மற்றும் வீக்கங்கள் குணமாகிவிடும்.

சிறுநீர்த்தாரை எரிச்சல் போக்கும் தழுதாழை: சிலருக்கு சிறுநீர் கழிக்கையில் அதிக எரிச்சல் உண்டாகும், இந்த பாதிப்பை போக்க, சிறிது தழுதாழை வேரை நீரில் இட்டு நன்கு சூடாக்கி, அதில் பனங்கற்கண்டு சேர்த்து, இருவேளை பருகி வர, சிறுநீர்த்தாரை எரிச்சல் மற்றும் வலியை போக்கி விடும்.

தழுதாழை தேநீர்: தழுதாழை இலைகளை சிறிது நீரில் இட்டு கொதிக்க வைத்து, அதில் பனை வெல்லம் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து பருகிவர, பருவநிலை மாறுபாட்டால் ஏற்படும் உடல் நலக் குறைபாடுகளைக் களையலாம்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும்.

அனுமனை வழிபடும் போது இப்படி வழிபடுங்கள்! குபேரனுக்கு இணையாக வாழ்வார்களாம்!