அடிக்கடி சோர்வடைய காரணங்கள் | தீர்வுகள்!

மனிதர்களுக்கு அவரவர் இருப்பிடம், சூழ்நிலைகள், உணவு முறைகளுக்குத் தகுந்தவாறு உடல் ஆரோக்கியம் அமையும். இக் காலத்தில் எந்த சூழலில் வசித்தாலும், பூமி வெப்பமயமாதல் காரணமாக சூதோஷ்ண நிலை கெட்டு, மனிதர்களுக்கு புதிய புதிய நோய்கள் உண்டாகிறது.

உடல் சோர்வு

குறிப்பாக அன்றாடம் வேலை செய்யும் மனிதர்களுக்கு அடிக்கடி சோர்வு உண்டாகிறது. வேலை செய்யாமலேயே வெட்டியாய் உட்கார்ந்திருப்பவர்களை கூட இந்த சோர்வு விட்டு வைப்பதில்லை. அடிக்கடி சோர்வு ஏன் ஏற்படுகிறது? அதை எப்படி தடுக்கலாம் என்பதை அறிந்துகொள்வோம்.

அடிக்கடி சோர்வு அடைவதற்கான 10 காரணங்கள் மற்றும் அவற்றிற்கான தீர்வுகள்:

தூக்கம் இன்மை :INSOMNIA குழந்தைகளுக்கு எட்டு முதல் பத்து மணி நேரமும் , பெரியவர்களுக்கு ஆறு முதல் எட்டு மணி நேர துக்கம் அவசியம் .

தூக்கத்தில் மூச்சுவிட மறத்தல் : SLEEP APNEA-இந்த நிலை மிகவும் குண்டான , புகை பழக்கம் உள்ளவர்களுக்கு வரும் . உறக்கத்தில் அடிக்கடி மூச்சு நின்று நின்று வருவதால் இவர்கள் நாள் முழுதும் சோர்வாகவே இருப்பார்கள் .எட்டு மணி நேரம் தூங்கினாலும் இரண்டு மணி நேரம் தூங்கிய உணர்வே இருக்கும் .

மருத்துவம் ; எடை குறைப்பு , புகைப்பதை நிறுத்துதல்.

மாறுபட்ட உணவு : காலை உணவு சாப்பிடாமல் இருத்தல் , சரிவிகித உணவு உண்ணாமை , நேரம் தவறி சாப்பிடுதல் , அதிகபடியான அசைவ உணவு , உணவு அலர்ஜி.

மருத்துவம் : கட்டாய காலை உணவு , பழங்கள் , அளவுடன் அசைவம் , அலர்ஜி உள்ள உணவை தவிர்த்தல்.

ரத்த சோகை :பெண்களுக்கு , குழந்தைகளின் சோர்வுக்கு மிக முக்கிய காரணம் .

மருத்துவம் : இரும்பு சத்துமிக்க உணவுகள் : கல்லீரல் , கடலை முட்டாய், ..

மன அழுத்தம் : வெளியே தெரியாத மன அழுத்தமே பெரும்பாலான சோர்வுக்கு காரணம்

மருத்துவம் : நடை பயிற்சி , யோகா

THYROID HORMONE குறைபாடு ; வெளியே தெரியாத ஹோர்மோன் குறைபாடு ஒரு காரணம்.

மருத்துவம் : பரிசோதனை செய்து பின் ஹோர்மோனை ஈடு செய்தல்.

KAFFEINE OVERLOAD : கொஞ்சம் கொஞ்சமாக நெறைய தடவை குடிக்கும் காபி டி போன்றவை முதலில் ஒரு தற்காலிக உற்சாகம் தந்து பின் இறுதியில் சோர்வையே தரும் .

நீரிழிவு நோய் : 35 வயதை கடந்தாலே இதுவும் ஒரு சோர்வுக்கு ஒரு காரணம் வெறும் வயிற்றில் 110 MG , சாப்பிட்டவுடன் 160 MG கீழே இருக்கவேண்டும் .

சிறு நீர் தொற்று : பெண்கள் ,சிறு குழந்தைகள் – வெளியே தெரியாத தொற்றும் நாள்பட்ட சோர்வுக்கு காரணம்

மருத்துவம் : அதிகம் தண்ணீர் குடிக்கவும் , நீரை அடக்கிவைக்க கூடாது .

உடலில் நீர்,உப்பு பற்றாகுறை(DEHYDRATION ) போதிய அளவில் நீர் குடிக்காமல் இருப்பது மற்றும் வியர்வையில் நீர் ,உப்பு இழப்பு .

மருத்துவம் : ஒரு நாளைக்கு 3 லிட்டர் நீர் அருந்துதல்.

அனைவருக்கும் பகிருங்கள்! இது போல பயனுள்ள அழகு, மருத்துவ குறிப்புகள் பெற எங்கள் பக்கத்தை லைக் செய்யவும். மேலும் பல பயனுள்ள தகவல்கள் கீழே…

கருவாட்டை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது?